செவ்வாய், 27 ஜூலை, 2021

Eating Well Always: உணவு விரயம் ஒரு சமூகக் குற்றமா..?

Eating Well Always: உணவு விரயம் ஒரு சமூகக் குற்றமா..?:    உணவை விரயமாக்குவது இந்தியாவில் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல; உலகம் முழுவதிலும் நடக்கும் சமூக அநீதி ! எத்தனையோ சிரமங்களுக்கு இட...

திங்கள், 12 ஜூலை, 2021

Eating Well: What are the benefits of essential protein..?

Eating Well: What are the benefits of essential protein..?: The health lesson we have all learned over the past few months is that if you have the immune system you can see the corona wit...

Eating Well: What are the benefits of eating fish ..?


Eating Well: What are the benefits of eating fish ..?: Eating fish every day instead of meat dishes like chicken and mutton can help you escape from cholesterol, the biggest enemy of heart health...

Eating Well: Do you want to have sex immediately after eating?

Eating Well: Do you want to have sex immediately after eating?: Psychologists say that there is a connection between food and physical contact.  The food we eat acts on our body and stimulates...

ஞாயிறு, 11 ஜூலை, 2021

Eating Well: Super Recipes - 1 How to make carrot delight ..?

Eating Well: Super Recipes - 1 How to make carrot delight ..?: required things  Chopped carrots - half a kilo  Sugar - half a cup  Corn flour - a quarter cup  Water - 1 cup  Ghee - 2 tbsp  In...

Eating Well: Is pomegranate tea good for your health?

Eating Well: Is pomegranate tea good for your health?:  There are many types of tea in circulation such as Black Tea, White Tea, Green Tea, Jasmine Tea, Ginger Tea, Spicy Tea and Herb...

Eating Well: Can plastic bottles be turned into vanilla flavor ..?


Eating Well: Can plastic bottles be turned into vanilla flavor ..?: Production of chemical could help make recycling more attractive and tackle global plastic pollution.    Plastic bottles have be...

Eating Well: What are the benefits of eating fish ..?

Eating Well: What are the benefits of eating fish ..?: Eating fish every day instead of meat dishes like chicken and mutton can help you escape from cholesterol, the biggest enemy of heart health...

சனி, 10 ஜூலை, 2021

இதய நோய்க்கு எண்ணெய் தான் காரணமா?

எண்ணெய் அதிகம் சேர்த்தா, கொலஸ்ட்ரால் அதிகமாகி இதய நோய்க்கு வழிவகுக்கும்' என்று மருத்துவ உலகம்  அரை நூற்றாண்டுக்கும் மேல் சொல்லி வருகிறது. இந்நிலையில், 'உண்மையில் சர்க்கரைதான் இதய நோய்க்கு முக்கியக் காரணம். ஆனால், உலகளாவிய சர்க்கரைச் சந்தையும் அரசியலும் அந்த உண்மையை மறைக்க, 1960-ஆம் ஆண்டு, பிரபல மருத்துவப் பத்திரிகையில் 'இதய நோய்க்குக் காரணம் எண்ணையே' என்று பெரிய தொகையை 'செலவழித்து' எழுதவைத்து, பயத்தை கொழுப்பின் பக்கம் திருப்பிவிட்டுவிட்டது' என்று சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது,

 அமெரிக்க மருத்துவ இதழானா ஜாமா (JAMA Journal of American Medical Association).

 ஜாமா' கூறுவது என்ன?

 1960-களில் 'Internal Sugar Industry - Sugar Research Foundation (இன்று இது 'சுகர் அசோஸியேஷன்' என்று அழைக்கப்படுகிறது) அமைப்பு நடத்திய ஆய்வில், எண்ணெயைவிட உடலில் கொழுப்புச்சத்தை அதிகம் சேரவைத்து இதய ரத்தக் குழாய் நோய்கள் (CVD Cardio Vascular Disease) ஏற்பட பெரிதும் காரணமாக இருப்பது சர்க்கரைதான்' என்ற உண்மை, மார்க் ஹெக்ஸ்டட் மற்றும் ராபர்ட் மெக்கண்டி என்ற ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

 இந்த ஆய்வை வெளியிட்டால், சர்வதேச சர்க்கரை வணிகம் பாதிக்கப்படும், அதன் மூலம் கிடைக்கும் பெருமளவு லாபம் குறையும் என்பதால், இந்த உண்மை மக்களைச் சென்றடையாமல் இருக்க, உலகம் முழுக்க பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டார்கள். மேலும், சர்க்கரை மீதான குற்றச்சாட்டை எண்ணெயின் பக்கம் திருப்ப, நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆஃப் மெடிசின் என்ற மருத்துவ இதழில், ஆய்வின் உண்மையான முடிவுகள் மாற்றப்பட்டு, 'உடல் பருமனுக்கும் அது சம்பந்த்மான நோய்களுக்கும் பெரிதும் காரணம், எண்ணெய் பொருட்களே' என்று எழுதவைத்தனர். மேலும், இவ்வாறு முடிவுகளை மாற்றி வெளியிட்டதற்கான சம்பந்தப்பட்ட இரண்டு ஆய்வாளர்களுக்கும் பெரும் தொகை வழங்கப்பட்டது.
 இந்த அதிர்ச்சியான ஊழலைத்தான் சமீபத்தில் அம்பலமாக்கியிருக்கிறது 'ஜாமா' இதழ். வேதியலாளர் மற்றும்  'ஜாமா'வின் சர்க்கரை குறித்த அறிவியல் ஆலோசகர் க்ரிஸ் கெரன் என்ற பெண் அந்த இதழில் எழுதியுள்ள இந்த ஆய்வுக் கட்டுரை, உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 '
 சர்வதேச மக்கள் அமெரிக்க ஆய்வு முடிவுகளைச் சார்ந்து இருப்பதை பயன்படுத்திக்கொண்டு, பணம் கொடுத்து, சர்க்கரையில் பொதிந்துள்ள ஆபத்தை உலகின் கவனத்துக்குச் சென்றுவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகளாக சர்க்கரையின் ஆபத்தை மறைத்து, அதை மக்களின் அன்றாட, தவிர்க்கமுடியாத உணவாக வளர்த்துவிட்டிருக்கிறது 'சுகர் அசோசியேஷனின் சர்வதேச சந்தை. சராசரியாக அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு 10 சதவிகித சர்க்கரையை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இளவயது மரணங்களுக்கு இந்த உணவுப் பழக்கமே முக்கியக் காரணமாக அமைகிறது. சர்க்கரையால் இத்தனை ஆண்டுகளாக பலியாக்கப்ப்பட்ட உயிர்களுக்கு என்ன பதில்?' என்று கேட்கிறார், கட்டுரையாளர் க்ரிஸ் கெரன்.

 மருத்துவர்களின் சர்க்கரையின் ஆபத்து பற்றிச் சொல்லும்போது, 'சர்க்கரை என்பது ஃப்ரக்டோஸ் (FRUCTOSE) மற்றும் குளுக்கோஸ் (GLUCOSE) சமபங்கு கலவை. இதில் குளுக்கோஸ் எளிதில் ஜீரணமாகும். ஆனால், ஃப்ரக்டோஸை ஜீரணிக்க கல்லீரலில் உள்ள நொதியால் மட்டுமே முடியும். அளவுக்கு அதிகமாக சர்க்கரை உண்ணும்போது, அதற்கு ஈடுகொடுத்து கல்லீரலால் அந்த நொதியைச் சுரக்கமுடியாத காரணத்தால், ஃபிரக்டோஸ்  கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேகரிக்கப்படும். இதுவே இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்க்கு முக்கியக் காரணியாக அமைகிறது.
 மேலும், கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் வீங்கும் பிரச்னையான ஆல்கஹால் அல்லாத  ஃபேட்டி லிவர் நோய் (NON ALCHOHOLIC FATTY LIVER DISEASE) ஏற்படுகிறது.

 சர்க்கரையில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் என எந்த ஊட்டச்சத்தும் இல்லை. அது தருவது வெறும் கலோரிகளைத்தான். இந்த அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேரிக்கப்படுவதால், உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் என பல பிரச்னைகள் ஏற்படும்' என்று சர்க்கரை மீது மருத்துவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் நிறைய.
 சர்வதேச உணவுச் சந்தை, தனிமனிதப் பேராசை, விலைபோகும் ஆராய்ச்சியாளர்கள், குழந்தையைக் கிள்ளி தொட்டிலை ஆட்டும் மருந்துச் சந்தை... இவர்கள் அனைவரும் மக்களைவைத்து ஆடும் ஆடு புலி ஆட்டத்தில், சர்க்கரையில் இருந்து அரிசி, நூடில்ஸ், பிரெட் என நம் தட்டில் விழும் ஒவ்வொரு பொருளும் உணவா விஷமா எனற கேள்வி, தொடர்ந்துகொண்டேதான் இருக்கப்போகிறது!

செவ்வாய், 6 ஜூலை, 2021

உணவு அரசியல் : ஒரே நாடு - ஒரே கார்டு

மோடி அரசு தனது “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை நிறைவேற்ற ஓராண்டு காலகெடு நிர்ணயித்துள்ளது. . இதன் மூலம் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் நமது ரேஷன் அட்டையைக் காட்டிப் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியுமாம். மாநிலங்களின் கருத்துக்கள் எதையும் கேட்காமல் கட்டாயமாக நிறைவேற்ற ஆணையிடப் பட்டுள்ளது.. அது மட்டுமல்ல ‘பி.ஓ.எஸ்’ கருவியின் மூலம் ரேஷன் வாங்க வருபவரின் விரல் ரேகையை ஆதார் அட்டையுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துத்தான் பொருட்களை அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் தண்ணீர் இல்லை. பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது, வேலை வாய்ப்பு அருகிக் கொண்டே போகிறது. அது குறித்தெல்லாம் கவலை கொள்ளாத அரசு இப்படி நாட்டை “ஹை-டெக்” ஆக்குவதில் மும்முரம் காட்டுகிறது. இவற்றால் ஏழை எளிய எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் படும் அவதிகள் ஏராளம். 

உழைப்பாளிகளாக உள்ள இம்மக்களின் விரல் ரேகைகள் தேய்ந்ததின் விளைவாக 2018ல் மட்டும் டெல்லியில் 31,199 பேர்கள் இச்சோதனையில் வெற்றிபெற முடியவில்லை. இவர்களுக்கு ரேஷன் மறுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தவர்களின் மொத்த எண்ணிக்கையையும் சேர்த்தால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 1,20,000 பேர்கள். அது மட்டுமல்ல. குடும்ப அட்டையில் பெயருள்ளவர்கள் நேரடியாகச் சென்றுதான் இம்முறையில் பொருட்களைப் பெறமுடியும். தனியாக வாழும் வயதானவர்களுக்கு இது பெரும் பிரச்சினை.

“ஒரேநாடு, ஒரே ரேஷன் அட்டை” திட்டத்திற்கு மோடி அரசு சொல்லும் ஒரே நியாயம் இதன்மூலம் மாநிலம் விட்டு இடம் பெயர்ந்து பணியில் இருப்பவர்கள் பயனடைவார்கள் என்பதுதான். நாடு முழுவதும் மாநில வேறுபாடுகள் இல்லாமல் ஒரே கார்டுதான் என்பதால் எங்கும் யாரும் தங்கள் பங்கைப் பெற்றுவிட முடியும்.

“வெளி மாநிலத்தவர்கள் இங்கே வேலை செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏன் ரேஷன் கொடுக்க வேண்டும்? எனவே இதை ஏற்க முடியாது” என்கிறார்கள் நம்மில் சிலர். நான் இதை ஏற்கவில்லை. இப்போது நடைமுறையில் உள்ள முறையிலேயே பிற மாநிலத்தவர்களும்  தங்களின் மாநில அட்டைகளைக் காட்டி இங்கேயே மத்திய அரசு மானியத்தில் கொடுக்கும் பொருட்களை மட்டும் பெறலாம் என்பது என் கருத்து. மாநில அரசு அளிப்பதை வேண்டுமானால் அவர்களுக்குக் கொடுக்காமல் நிறுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இங்கு வந்து வேலை செய்யும் வெளிமாநிலத்தவர் எல்லோருமே பெரிய அதிகாரிகள் இல்லை. மிகக் குறைந்த கூலியில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்படுகிற வெளிமாநிலத் தொழிலாளிகள்தான் ஏராளம். அவர்கள் வயிற்றில் நாம் அடிக்க வேண்டியதில்லை.

இந்தத் திட்டம் மோசமான ஒன்று, இதை ஏற்கக் கூடாது எனச் சொல்வதற்கு என்னிடம் வேறு பல நியாயங்கள் உண்டு. இந்தத் திட்டத்தை நாம் தனித்துப் பார்க்கக் கூடாது இத்துடன் மோடி அரசு திணிக்கும் “ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு”, “ஒரே நாடு ஒரே பயண அட்டை”, “ஒரே நாடு ஒரே ஆதார் அட்டை” என்கிற வரிசையில் இன்று இதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டும் மோடி அரசின் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றின் ஊடாக மாநில அரசு 

அதிகாரங்களுள் அத்து மீறல் நடைபெறுகின்றது. பொது வினியோக முறை அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து வன்முறையாகப் பறிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. ஒரே மாதிரியான உணவுப் பொருட்கள்தான் எல்லா மாநிலங்களிலும் அளிக்கப்படும் என்கிற நிலையை இதன்மூலம் எளிதாக ஏற்படுத்தலாம். நமது தனிப்பட்ட உணவு முதலான வழமைகளுக்குள்ளும் இப்படி மத்திய அரசு மூக்கை நுழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்..

மோடி அரசு இத்துடன் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இனிமேல் மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளை மத்திய அரசே அகில இந்தியத் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யுமாம். நீதித்துறையைக் கையகப்படுத்துவதற்கு பா.ஜ.க அரசு வெறியோடு நிற்பதை நாம் அறிவோம். ‘கலேஜியம்’ முறையை ஒழித்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தாமே தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவர முயற்சிப்பவர்கள் இவர்கள். அது இப்போதைக்கு முடியவில்லை என்பதால் மாநில நீதித் துறையைக் கைவசமாக்கிக் கொள்ள நிற்கின்றனர்.

ஏற்கனவே ஆளுநர்கள் மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் இப்படி அதிகாரங்களை  எல்லாம் தன் கையில் சுருட்டிக் கொண்டு மாநில அரசை டம்மி பீசாக மாற்றும் செயல்பாடுகளில் இதுவும் ஒன்று.

மோடி அரசு இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த கையோடு இந்த வேலைகள்.  படு தீவிரமாக நடக்கின்றன. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” எனும் முழக்கத்தைப் பதவி ஏற்ற அடுத்த நாள்முதல் தொடங்கிவிட்டார் நரேந்திர மோடி. எந்நாளும் தாங்கள் கால் ஊன்ற முடியாத தமிழகம், கேரளம் முதலான மாநிலங்களில் வேர் பதிக்க ஒரே வழியாக அவர்கள் இதைப் பார்க்கிறார்கள்  ஒரே நாளில் தேர்தல் நடத்தும்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி வெற்றிபெறும்  வாய்ப்பு அதிகம் என்பதால் அதில் தீவிரனாக உள்ளனர்.

மோடி அரசு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். “ஒரு தேசத்திற்கு அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட ஒரே அரசு” (Nation State) என்பது ஒரு ஐரோப்பியக் கருத்தாக்கம். வரலாறு முழுவதிலும் இந்தியா உள்ளிட்ட ஆசியநாடுகள் இப்படி அதிகாரங்கள் மையத்தில் குவிக்கப்பட்ட ‘தேச அரசுகளாக’ இருந்ததில்லை. வரலாறு முழுவதும் பல கூறுகளுக்கிடையில்  அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட  அமைப்புகளாகவே (segmentary state) அவை இருந்துள்ளன. அந்த வகையில் இன்றைய இந்திய அரசமைப்பை “அரசுகளின் தேசம்” (State Nations) என்பார்கள்.

இந்தியத் துணைக்கண்ட மக்கள் “பகிர்ந்து கொள்ளப்பட்ட இறையாண்மை” (shared sovereignty) என்பதற்கே பழக்கப்பட்டவர்கள். அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் முயற்சிகள் பாம்புப் புற்றுக்குள் கையை விடும் முட்டாள்தனமாகவே அமையும்.

திங்கள், 5 ஜூலை, 2021

சர்க்கரை நோயாளிகள்.. மாற்றுத் திறனாளிகளா..?


சர்க்கரை நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்கலாமா? என்று நீதிமன்றம் கேள்வி கேட்குமளவுக்கு நிலைமை கவலைக்கிடமாகிவிட்டது. `அதெல்லாம் பணக்கார நோயாச்சே...' என்று சொன்ன காலமெல்லாம் இன்று மலையேறி விட்டது. ஏழை-பணக்காரன், குழந்தை-பெரியவர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் வருகிறது. அதேபோல, `அது ஒரு பரம்பரை வியாதி; பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளைப் பாதிக்கும்' என்று சொல்லப்படும்

இலக்கணங்களையெல்லாம் மீறி யாருக்கு வேண்டுமானாலும் அழையா விருந்தாளியைப்போல வந்து போகிறது.
குழந்தைப்பேறு காலத்தில் சில பெண்களைப் பாதிக்கும் சர்க்கரை நோய் சிலரிடம் நிரந்தரமாகக் குடியேறிவிடுகிறது. அதேபோல், தாயைப் பாதித்த அந்நோய் வயிற்றில் இருக்கும்போது இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் குழந்தைகளைப் பாதிக்கின்றது. இப்படி எந்த நிலையிலும் யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரை நோய் வரலாம், ஒரு திருடனைப்போல..!
சர்க்கரை நோயின் பாதிப்பு ஏன் இந்த அளவுக்கு இருக்கிறது என்பதுபற்றி நாம் சிந்திக்கவேண்டும்.

என் தாத்தா காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சர்க்கரை நோய் கொள்ளை நோயைப்போல பல்கிப் பெருகக் காரணம் என்ன? அதற்கான விடை நம்மிடமே இருக்கிறது. இன்றைக்கு சுமார் 50, 60 வயதில் இருப்பவர்கள் அவர்களது சிறு வயது நினைவுகளை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தால் தெரியும். அன்றைய காலத்தில் உண்ட உணவுகளுக்கும் இப்போது நாம் உண்ணும் உணவுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்தாலே அதிலுள்ள உண்மை விளங்கும்.

கிராமம், நகரம் என்ற வித்தியாசமில்லாமல் ஆங்காங்கே காணப்படும் வேப்ப மரங்களில் காய்த்துக் கிடக்கும் சிறு பழங்களை வாயில் குதப்பிக்கொண்டு அதிலுள்ள இனிப்புச்சுவையை ருசிப்பார்கள். ஆனால், கூடவே அதிலுள்ள மருத்துவக் குணங்கள் உள்ளே சென்று நோய்கள் வராமல் தடுக்கிறது. நாவல் மரங்களின் கீழே விழுந்து கிடக்கும் பழங்களை தூசி தட்டி, மண்ணை அகற்றிவிட்டு அப்படியே வாயில் போட்டுச் சுவைப்பதுண்டு. கெட்ட வாடை வீசும் மஞ்சணத்தி எனப்படும் நுணா மரங்களின் பழங்களையும் விட்டு வைப்பதில்லை.

காட்டுப்பகுதியில் கிடக்கும் இலந்தைப் பழத்தை அப்படியே எடுத்து வாயில்போட்டுச் சாப்பிடுவது இன்றும் தொடர்கிறது. பனம்பழத்தைச் சுட்டும் செங்காயை கருப்பட்டி சேர்த்து வேகவைத்தும் சாப்பிடுவோம். இவையெல்லாம் விலை கொடுத்து வாங்காமல் இலவசமாக எளிதாகக் கிடைப்பவை. அவை ஆரோக்கியம் தரும் பழங்கள் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்?

சர்க்கரை நோயாளிகளை பழம் சாப்பிடக்கூடாது என்று சொல்லி அவர்களின் வாயைக் கட்டுவதுடன் சுவைகளை அறியவிடாமல் செய்துவிடுகிறார்கள் சில மருத்துவர்கள். மா, பலா, வாழை என முக்கனிகளையும் ஒருசேரச் சுவைத்துச் சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக. கடலூரைச் சேர்ந்த ஒரு ஹோமியோபதி மருத்துவர் இந்தமுறையைத்தான் பின்பற்றுகிறார். 

ஆனால், அவர் வெறும் வயிற்றில் பழங்களை மட்டுமே சாப்பிடுகிறார். பசி எடுத்தால், வயிற்றுக்கு தேவைப்பட்டால் இரண்டு மணி நேரம் கழித்து வழக்கமான உணவைச் சாப்பிட்டும் சர்க்கரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சர்க்கரைச் சத்து அதிகம் இல்லாத நார்ச்சத்து நிறைந்த பழங்களை தாராளமாகச் சாப்பிடலாம் என்றும், சர்க்கரை நோயாளிகள் தினமும் நான்கைந்து பழங்களைச் சாப்பிடலாம் என்றும் ஆய்வுகளும் கூறுகின்றன.

குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும் கொய்யாப்பழத்தைச் சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துகள் அதிகமாகவும் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் இருக்கின்றன. இதில் சர்க்கரைச் சத்து குறைவு; நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை சரிசெய்யும். அதேபோல் நாவல் பழம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை விரைவில் கட்டுப்படுத்தும். இதன் கொட்டையைச் சாப்பிடுவதால், அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிக விரைவாகக் கட்டுப்படுத்தும். நாவல் வேர் ஊறிய நீரை அருந்துவதன் மூலமும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். இவை தவிர அன்னாசி, ஆப்பிள், பேரிக்காய், மாதுளை, பப்பாளி மற்றும் சிட்ரஸ் உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களைச் சாப்பிடலாம். கிவி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி உள்ளிட்ட பெர்ரி வகைப் பழங்களையும்கூட சாப்பிடலாம்.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு முழு நெல்லிக்காயுடன் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக பாகற்காய் சேர்த்து அரைத்து சாறு எடுத்து அருந்தி வருவதன்மூலம் இன்சுலின் தாராளமாகச் சுரக்கும். வாழைப்பூ, வெள்ளரிக்காய், வெண்டைக்காய், கேரட், முட்டைக்கோஸ் மற்றும் பச்சை நிறக் காய்கறிகள், நார்ச்சத்து அதிகமுள்ள கீரைகள், வெள்ளைப்பூண்டு, மஞ்சள், பீன்ஸ், வெந்தயம் உள்ளிட்ட உணவுகளை அடிக்கடி சேர்த்து வந்தாலே சர்க்கரை நோயாளிகள் நலமுடன் வாழலாம்.
அரிசி உணவு சர்க்கரை நோயை அதிகரித்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

உண்மையில், இன்றைக்கு உள்ள பாலிஷ்டு அரிசிகளால்தான் நோய்கள் வரும். முன்பெல்லாம் பட்டை தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியைத்தான் உண்பார்கள். தவிடு நீக்கப்படாத அந்த அரிசிகளை உண்பதால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும். 

கூடவே அரிசியில் உள்ள மாவுப்பொருள்களை செரிமானமடையச் செய்யக்கூடியது தவிடு என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? அதுமட்டுமல்ல அன்றைக்கு பயிரிடப்பட்ட நெல் ரகங்கள் பெரும்பாலும் நீண்டகாலம் விளையக்கூடியவை. இன்றைக்குப்போல் அவசரத்தில் விளைவிக்கப்பட்டவை அல்ல.

பாரம்பரிய அரிசிகள் மகிமை நிறைந்தவை என்று மார் தட்டுவது வெற்று வார்த்தைகள் அல்ல. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவக் குணம் இருக்கும்.

சம்பா அரிசியின் தவிட்டுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதை ஒரு தின்பண்டமாகவே கொடுத்தார்கள். மாவுச்சத்து மட்டுமல்லாமல் நார்ச்சத்து நிறைந்த சம்பா ரக அரிசிகளில் உள்ள சத்துகள் அதிகம். மாப்பிள்ளைச் சம்பா, கார்த்திகைச் சம்பா, கிச்சடிச் சம்பா, மணிச் சம்பா, மல்லிகைப்பூ சம்பா என அரிசி ரகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி அன்றைக்கு சாப்பிட்டவை எல்லாமே நோய் நீக்கியாகவே இருந்தன. இவற்றால் சர்க்கரை நோய் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அதுமட்டுமல்ல, அன்றைக்கு ஒட்டுமொத்த குடும்பமும் உழைக்கும். அப்பா ஆடு, மாடுகளை பராமரிப்பார். அம்மா வீட்டைச் சுத்தம்செய்வது, பாத்திரம் கழுவுவது, உரலில் நெல் குத்தி எடுப்பது, ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பது, அம்மியில் மசாலா அரைப்பது என பம்பரமாய் சுழல்வார். அக்கா வீட்டுக்கு வெளியே இருக்கும் அடுப்பில் நெருப்பு மூட்டி சமைத்துக் கொண்டிருப்பார். அண்ணன் விறகு வெட்டுவதுடன் தோட்ட வேலைகளைச் செய்வார். தங்கையும் தம்பியும் வீட்டைச் சுற்றியிருக்கும் செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவார்கள்.

இப்படி ஒட்டுமொத்தக் குடும்பமும் உடல் உழைப்பில் ஈடுபடும். இவற்றால் யாருக்கும் எந்த நோயும் வந்ததில்லை. அப்படியே வந்தாலும் தாத்தா கொடுக்கும் பச்சிலை மருந்துகளால் அவை வெகுதூரம் போய்விடும்.சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாது, கருப்பட்டி சாப்பிடக்கூடாது என்றும் இயற்கை விளைபொருள்கள் பலவற்றைப் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் சிலர் கூறுகிறார்கள். இயற்கையின் மகத்தான கொடையான தேன் சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதுகாப்பானதே. அதைச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் அதிகரிக்காது. ஆனாலும், இன்றைக்குக் கிடைக்கும் தேன் இயற்கைமுறையில் பெறப்படுகின்றனவா? `ஆர்கானிக்', `மலைத்தேன்' என்றெல்லாம் சொல்லி விற்கப்படும் தேனெல்லாம் உண்மையானதா?

அதிலும் சிலர் ஒருபடி மேலேபோய் தும்பைத் தேன், துளசித் தேன், நாவல் தேன் என்று சொல்லிக்கொண்டு மக்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். தேன் விற்பவர் மீதுள்ள நம்பிக்கையில் வாங்கினாலும் அவருக்கு கொடுத்தவர் எப்படிப்பட்டவர், அவர் எங்கிருந்து அந்தத் தேனை பெற்றார்? உண்மையிலேயே அது தேன் தானா? என்று பல கேள்விகள் எழுகின்றன. 

மருத்துவக் குணம் நிறைந்த தேன் தன் மகத்துவத்தை இழக்கும்போது அது சர்க்கரை நோயை மட்டுமல்ல வேறு பல நோய்களையும் உண்டாக்கத்தானே செய்யும்?

முன்பெல்லாம் டீ, காபியில் சேர்க்கப்படும் சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி சேர்த்தே சாப்பிட்டார்கள். பெரும்பாலும் பால் சேர்ப்பதில்லை. கடுங்காபி அல்லது கட்டஞ்சாயாவையே குடிப்பார்கள். இதனால் எந்த நோயும் வந்ததாகத் தெரியவில்லை. கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இப்படி இயற்கை விளைபொருட்கள் அனைத்தும் நோய்கள் வராமல் தடுப்பதுடன் நோய்களைக் குணப்படுத்தும் மாமருந்தாக இருந்தன. 

ஆனால், இன்றைக்கு நாம் உண்ணும் உணவுகளில் பெரும்பாலானவை நோய்களை உருவாக்குபவையாகவே இருக்கின்றன. ஆகவே, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும். சர்க்கரை நோய் என்று இல்லை; எந்த நோயும் நம்மை நெருங்காமலிருக்க உண்ணும் உணவில் தொடங்கி எல்லா நிலைகளிலும் மாற்றம் வர வேண்டும்.